Uriyadi 2017 Invitation

Please join us and seek the blessings of Lord Venkatesa Perumal on the occasion of Uriyadi Festival. This year the festivities start on Aug 08, 2017 and go upto Aug 17, 2017. Uriyadi Utsavam is on Tuesday, Aug 15, 2017.

நிகழும் மங்களகரமான ஹேவிளம்பி வருஷம் ஆடி மாதம் 23-ஆம் தேதி (08-08-2017) செவ்வாய்க்கிழமை முதல் ஆவணி மாதம் 1-ஆம் தேதி (17-08-2017) வியாழக்கிழமை முடிய 10 தினங்களுக்கு ஶ்ரீவேங்கடேச பெருமாள் கோயிலில் உறியடி உத்ஸவம் நடைபெற இருக்கிறது.

15-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று உறியடித் திருநாள். அன்று காலையில் சுமார் 12:00 மணி அளவில் ஸ்வாமி வெண்ணைதாழி கோலத்தில் பல்லக்கில் எழுந்தருளி நாதஸ்வரம், வேத பாராயணம், பஜனை கோஷ்டிகளுடன் வீதியுலா வந்து (காளிந்தி) கடுங்கால் நதிக்கரையிலுள்ள மண்டபத்தில் எழுந்தருள்வார். 

மாலை 7:00 மணிக்கு விசேஷ திருமஞ்சனம். இரவு சுமார் 12:00 மணி அளவில் ஸ்வாமி வெள்ளி கேடயத்தில் விசேஷ அலங்காரத்துடன் வீதியுலா புறப்பாடு. மறுநாள் (16-08-2017) புதன்கிழமை அன்று ஶ்ரீ ருக்மணி கல்யாணம் அதற்கு மறுநாள் (17-08-2017) வியாழக்கிழமை அன்று பக்த உத்ஸவத்துடன் முடிவுபெறும்.  

பக்தர்கள் அனைவரும் திரளாக வந்திருந்து மேற்படி உத்ஸவத்தில் கலந்துகொண்டு ஶ்ரீவேங்கடேசபெருமாளின் அருளுக்குப் பாத்திரர்களாகும்படி வேண்டுகிறோம்.   

இங்ஙனம், 

பரம்பரை அறங்காவலர்கள், 

கிராம விசேஷ மஹா ஜனங்கள் 

வரகூர். 

Check Varagur to Thanjavur Bus Timings here

Invitation